பதுளையில் விசேட பொலிஸ் நடவடிக்கை,பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 120 பேர் கைது
பதுளை பொலிஸ் DCDB யில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 4.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று பதுளையில் தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்திருந்த விசேட விசாரணையின் போது 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ் திட்டமானது பதுளை நகரின் 9 இடங்களை உள்ளடக்கியதாக சுமார் 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது
செய்யப்பட்டவர்களில் இருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் 118 பேர், சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் மற்றும் வருமான அனுமதிப்பத்திரம் இல்லாமை என்பதோடு வாகனங்களுக்கு சட்டவிரோதமான முறையில் அலங்கார உதிரிபாகங்களைப் பொருத்தியமை போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.