உள்நாடு
Jan 27, 2026
ஆசிரியர் பாதுகாப்பு, சமூகத்தில் அதிகரிக்கும் வன்முறை
பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல், இச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைப்பெற்றுள்ளது. மேலும் இவ் சம்பவம் அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.இவ் தாக்குதலிற்க்கு முக்கிய காரணமாக
நீண்ட காலம் நிலவி வந்த பிரச்சினை ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் எற்ப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்
தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளது.