சிறுவர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் புதிய நியமனங்கள்

நேற்று சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு நிலையங்களுக்கு

விடுதித் தாய் மற்றும் மேற்பார்வையாளர் பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் நியமனங்களைப் பெற்றவர்கள் சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந் நிகழ்ச்சியில் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் புஷ்பகுமார திசாநாயக்க,

சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் பிரதீபிகா டி. இலுக்கும்புர, சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.சி.எல். ரத்நாயக்க, மாகாண சமூக சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹபரகடை, உதவி நன்னடத்தை ஆணையாளர் யூ.ஐ.டி. சேனாரத்ன, நிர்வாக உத்தியோகத்தர் இனோகா பரபிட்டிய உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்து உள்ளனர்.


Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660