உள்நாடு
Jan 27, 2026
பாதிரியார் மீது தாக்குதல் கம்பஹா நீதிமன்றத்தில் ஆறு பொலிஸார் முன்னிலை
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளை நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன் பின் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட அனுமதி அளித்துள்ளார்.மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.