நிலக்கரி ஒப்பந்தங்கள் மற்றும் பொறுப்புத்தன்மை யார் பதில் சொல்ல வேண்டும்?

மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அதாவது மார்ச் மாத நடுப்பகுதிக்குள் தேவையான நிலக்கரி கையிருப்பைக் கொள்வனவு செய்து முடிக்க வேண்டும். எனினும், தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக அந்த இலக்கை அடைவது சற்று கடினமாகவே காணப்படுகிறது. மேலும் இதற்கான முக்கிய காரணங்களாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், நிலக்கரியைத் தரையிறக்க முடியாது.ஆகவே அதற்கு முன்னதாகவே கையிருப்பைச் சேகரிக்க வேண்டும்.மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, 300 மெகாவாட் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மின்பிறப்பாக்கியிலிருந்து 240 மெகாவாட் மின்சாரத்தை மாத்திரமே பெற முடிந்துள்ளது. ஆதலால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய ஆய்வுக்கூட சோதனையில் மூன்றாவது நிலக்கரித் தொகுதியும் தரமற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி நிலக்கரியின் கலோரி பெறுமதி 5900\text{ kcal/kg} ஆக இருக்க வேண்டும். ஆனால் பெறப்பட்ட நிலக்கரியில் அது 5600-5800\text{ kcal/kg} ஆகக் குறைந்து காணப்படுகிறது. மேலும் ஆண்டொன்றுக்குத் தேவையான 38 கப்பல்களில் இதுவரை 3 கப்பல்கள் மாத்திரமே வந்துள்ளன. மேலும் 3 கப்பல்கள் அடுத்த சில நாட்களில் நாட்டை வந்தடைய உள்ளன.தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் சுமார் 750 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாவது கப்பலுக்காக அரசாங்கம் ஏற்கனவே 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. மின் பொறியியலாளர்களின் கூற்றுப்படி, நிலக்கரியின் வெப்பச் சக்தி குறைவாக இருப்பதால், தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவு நிலக்கரியைச் செலவிட வேண்டியுள்ளது என கூறியுள்ளார்கள். இதற்கு

எடுக்கப்படும் நடவடிக்கைகளாக

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நிலக்கரியைக் கப்பலில் ஏற்றுவதற்கு முன்பே அதன் மாதிரிகளைப் (Samples) பரிசோதிக்க அவசரக் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் லங்கா கோல் (Lanka Coal) நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.மேலும்

நாட்டின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த மின் கட்டமைப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்கள்

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660