உலக உலோக சந்தையில் அதிரடி மாற்றம்: தங்கம், வெள்ளி, பெலேடியம் விலை உயர்வு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது.அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் படி இலங்கையில் இன்றைய தினம் 397,000. 00 ரூபாய் ஆக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.மேலும் தங்கத்தின் விலை மேலும் உயர்வடையக்கூடும் எனவும், இவ்வருட இறுதிக்குள் அது 5,500 டொலரை தாண்டும் எனவும் நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், இதற்கு இணையாக ஏனைய உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.74% இனால் அதிகரித்து 107.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.மேலும், ஒரு அவுன்ஸ் பெலேடியத்தின் (Palladium) விலை 0.17% இனால் அதிகரித்து 2,013.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.