அமெரிக்காவை முடக்கிய கடும் பனிப்புயல்

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல், இதன் காரணமாக இலட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், மேலும் 10,000 இற்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.அதேவேளை பல வீதிகள் பனியால் மூடி காணாப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் இவ் மோசமான காலநிலையானது

டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி,பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை “உயிருக்கு ஆபத்தான” நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.மேலும் இவ் நிலைமையில் லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெக்சாஸில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.மேலும் நேற்று பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660