78வது சுதந்திர தின அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட தகவல் திணைக்களம்.

இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 2026 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முற்பகல் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. மேலும் இவ் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இவ் தேசிய நிகழ்வை அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை அரசாங்க தகவல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. மேலும்

இவ் நிகழ்வு தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது அவை பின்வருமாறு,ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்தும் ஒரு அறிவிப்பாளர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர், பத்திரிகையிலிருந்து ஒரு செய்தியாளர் மற்றும் ஒரு புகைப்படக் கலைஞர், அத்துடன் வானொலி மற்றும் செய்தி இணையத்தளங்களிலிருந்து ஒரு செய்தியாளர் வீதம் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும்மேலும் இவ் நிகழ்வில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களின் பெயர், ஊடக அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட விபரங்களை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.குறித்த விபரங்களை 2026.01.30 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவல்களை 011-2513756 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கோ, 0771909968 எனும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது publicity@dgi.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.நிகழ்வு தினத்திற்கான நடைமுறைகள்,சுதந்திர தின நிகழ்வை அறிக்கையிட வருகை தரும் ஊடகவியலாளர்கள் அனைவரும் பெப்ரவரி 04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திற்கு வருகை தர வேண்டும். அங்கிருந்து சுதந்திரச் சதுக்கத்திற்கு செல்வதற்கான பஸ் வண்டி காலை 6.15 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்

அனைத்து ஊடகவியலாளர்களும் நிகழ்வின் போது பொருத்தமான ஆடைகளை அணிந்திருப்பதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிகழ்வு நிறைவடைந்ததும் அதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் திணைக்களத்தினால் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660