வவுனியாவில் பொலிசாரை மோதி தப்பிய லொறி சாரதி இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் கலுகுன்னமடுவ பகுதியில் கடமையில் இடுப்பட்டிருந்த பொலிசாரை மோதி விட்டு தப்பி சென்ற லொரி, மேலும் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தப்பி சென்ற லொரி சாரதி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். என பொலிசார் தெரிவித்து உள்ளனர்.மேலும் இது குறித்து கூறியதாவது,லொரியினை நிறுத்துமாறு கூறியதற்கு நிக்காமல் சென்ற போது பொலிசார் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற போதே இவ்வாறு விபத்து எற்ப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள் ஆனது லொரியிலன் அடியில் மாட்டிக்கொண்டுள்ளது ஆதலால் லொரி சாரதி வீதியில் வாகனத்தை விட்டு விட்டு அருகில் இருந்த கட்டிற்குள் தப்பி சென்று தலைமறைவாகினார்.இதனை அடுத்து பூ ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.