மக்கள் தீர்ப்பே இறுதி, பிரதமர் பதவி குறித்து ஹரிணி அமரசூரியவின் அறிவிப்பு
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர், நேற்று காலை நாட்டிற்கு வருகை தந்தார்.அதன் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். மேலும் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்,
ஜனாதிபதியை நீக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரதமரையாவது நீக்க முயற்சி செய்தார்கள் தானே. எங்கே அது? நான் இன்று காலை வந்ததும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே ஓடிவந்தேன்,மேலும் அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அது வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொண்டு வரவில்லையா? வீண் வேலை. நாங்கள் தயாராகவே இருந்தோம்.மற்றும் நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார்.நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம்,என அவர் தெரிவித்துள்ளார்.