உள்நாடு
Jan 24, 2026
ரூ.4.6 கோடி சொத்து விவகாரம், முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அதிகாரி கைது
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்செய்தது. குறித்த ஆணைக்குழுவினால் அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பில், அவரை நேற்று காலை இலஞ்ச ஊழல் புலனாய்வு குழு கைது செய்துள்ளது.