குடியேறாத வீட்டுத் திட்டங்கள் குறித்து விசேட விசாரணை, அமைச்சர் சுசில் ரணசிங்க
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் திலின சமரகோன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் கீழ் உள்ளவாறு தெரிவித்துள்ளார்,
நாடளாவிய ரீதியில் நிர்மாணப்பணிகள் நிறைவுற்ற பெருமளவு வீட்டுத் திட்டங்கள் மக்கள் குடியேறாத நிலையில் காணப்படுவதாகவும் அதற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.மேலும் இதற்கு தீர்வு காண விசேட குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானது அன்றைய அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கடன் மீள செலுத்தப்படாத நிலை காணப்படுவதால் வீடமைப்பு அதிகார சபை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.