உள்நாடு
Jan 23, 2026
அரசியலமைப்பு சபையில் மூன்று புதிய சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம்.
அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், பின்வரும் மூவர் அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக,பேராசிரியர் வசந்தா செனவிரத்ன,ஒஸ்டின் பெனாண்டோ,ரஞ்சித் ஆரியரத்ன பெயரிடப்பட்டுள்ளனர். மேலும் அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய நியமனங்கள் குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.