ஹல்தும்முல்ல மீள்குடியேற்றத் திட்டம் விரைவில்
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 50 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. இந்த மீள்குடியேற்றத் திட்டமானது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையினர் தமது தொழில்சார் பங்களிப்பினை வழங்கி இந்த நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.தற்போது இத்திட்டமானது பதுளை மாவட்ட செயலகம் மற்றும் ஹல்தும்முல்ல பிரதேச செயலகம் ஆகியவற்றின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.இவ் திட்டம்
நிலச்சரிவினால் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இழந்த 50 குடும்பங்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. இவ் மீள குடியமர்த்தும் திட்டத்தின் பணிகள் மிக விரைவில் நிறைவடைந்து, மக்கள் வசிக்கக் கூடிய வகையில் கையளிக்கப்படவுள்ளன.