நோபல் பரிசு வழங்காதது குறித்து ட்ரம்ப் நோர்வே மீது குற்றம்சாட்டியுள்ளது

நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர் ட்ரம்ப் இவ்வாறு கூறியதாக தெரிவித்து உள்ளார், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியைக் கட்டிக்காக்க வேண்டிய கட்டாயமில்லை என்று கூறியுள்ளார். மேலும் நோபல் பரிசு வழங்காதது குறித்து ட்ரம்ப் நோர்வே மீது குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ட்ரம்புக்கு பதில் அளித்திருக்கும் நோர்வே பிரதமர், சுயாதீனமான குழு ஒன்றே இந்த விருதை வழங்குவதாக விளக்கியுள்ளார். கடந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. ஆதலால் நோர்வே பிரதமருக்கு அனுப்பிய செய்தியில் ட்ரம்ப், ‘உலக அளவில் 8 போர்களை நிறுத்தியதற்காக உங்கள் தேசம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததை கருத்தில் கொண்டு, இனி அமைதி குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். மேலும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தை ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. எங்கள் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து வரும் வரை உலகம் பாதுகாப்பானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர் வழங்கில பதிலில் கூறியிருப்பதாவது, நோபல் பரிசை சுயாதீன குழுதான் வழங்குகிறது. இதை ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட அனைவரும் நன்கு அறிவர். அதில் நோர்வே அரசின் தலையீடு அறவே இல்லை. இதை நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நாட்டுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆர்க்டிக் பகுதியில் நேட்டோ அமைப்பு மேற்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த பணிகளுக்கு ஆதரவாக நேர்வே துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு எது நல்லது மற்றும் சரியானது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே முறுகலை ஏற்படுத்தி இருப்பதோடு அதனை இராணுவத்தை பயன்படுத்தியேனும் கைப்பற்றும் சாத்தியத்தை ட்ரம்ப் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660