கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் 100 வாகனங்கள் விபத்து.
கடுமையான பனிப்பொழிவால் 30 முதல் 40 கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அமெரிக்காவின் மிச்சிகன் மாநில வீதியில் விபத்துக்குள்ளாகின.
அவை மோதியதால் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் வீதியில் இருந்து விலகிச் சறுக்கியதால் சுமார் 100 வாகனங்கள் விபத்தில் சிக்கின மற்றும் பலருக்குக் காயம் ஏற்பட்டபோதும் உயிரிழப்புகள் இடம்பெறவில்லை என மாநிலப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின் வீதிகளை துப்புரவு செய்யும் வேலைகள் நடைபெறுகின்றன. பல மணி நேரங்களுக்கு வீதி மூடப்பட்டடு காணப்பட்டது. மேலும் வானிலை மோசமாக இருக்கும்போது வேகத்தைக் குறைக்குமாறு அதிகாரிகள் வாகனமோட்டிகளை வலியுறுத்தினர். மேலும் இவ் குளிர்காலப் புயல் தொடர்ந்து வட்டாரம் முழுவதும் பனிப்பொழிவை ஏற்படுத்தி வருகிறது. காற்றின் குளிர்ச்சி உட்பட தட்ப வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழே 22 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு 35.5 சென்டிமீட்டர் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.