உள்நாடு
Jan 21, 2026
வடக்கு முதலீட்டு மாநாடு இன்றும் நாளையும் யாழில் ஆரம்பம்.
இன்றும், நாளையும் நாட்டின் வட பிரதேசத்திலுள்ள முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை உலகுக்கு அறியப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில்,வடக்கு முதலீட்டு மாநாட்டினை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இம் மாநாடு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில்,இன்று காலை எட்டு மணிக்கு யாழ்,திருவள்ளுவர் மண்டபத்தில், நடைபெறுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அபிவிருத்தி பங்குடைமையாளர்கள் மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்