நீண்ட கால இடைவேளைக்குப் பின் மீண்டும் பரந்தன் இரசாயன நிறுவனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத் தூணாகக் கருதப்படும் பரந்தன் இரசாயன நிறுவனம் மீண்டும் தனது செயல்பாடுகளைத் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு, தொடங்கவுள்ளது. இவ் தொழிற்சாலையானது

1985 ஆம் ஆண்டு நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக முழுமையாகச் சேதமடைந்திருந்தது , தற்போது அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி 21 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பரந்தனில் அமைந்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளன.மேலும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.இத்தொழிற்சாலையின் ஆரம்பமானது வட மாகாணத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அப்பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660